நிரம்பி வழியும் சாக்கடை கால்வாய்


நிரம்பி வழியும் சாக்கடை கால்வாய்
x

மதகடிப்பட்டு 4 முனை சந்திப்பில் சாக்கடை கால்வாய் நிரம்பி வழிந்து துர்நாற்றம் வீசுவதால் பொதுமக்கள் அவதி அடைகின்றனர்.

திருபுவனை

மதகடிப்பட்டு 4 முனை சந்திப்பில் கடைகள், வணிக நிறுவனங்கள் என ஏராளமாக உள்ளன. வாகன போக்குவரத்து எப்போதும் பரபரப்பாக இருக்கும். இந்தநிலையில் மடுகரை செல்லும் சாலையில் அமைக்கப்பட்டுள்ள சாக்கடை கால்வாய் முறையாக தூர்வாராததால் கழிவுநீர் நிரம்பி வழிகின்றன. இந்த கழிவுநீர் சாலையில் தேங்கி நின்று துர்நாற்றம் வீசுவதால் பொதுமக்கள் அவதி அடைந்துள்ளனர். அந்த இடத்தை கடந்து செல்ல பொதுமக்கள் மூக்கை பொத்திக் கொண்டு செல்லும் அவலநிலை உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து தேங்கி நிற்கும் கழிவுநீரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

1 More update

Next Story