போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு முகாம்


போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு முகாம்
x

காரைக்காலில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு முகாம் நடந்தது.

காரைக்கால்

காரைக்காலை அடுத்த ராயன்பாளையம் ஜவகர் நவோதயா வித்யாலயா பள்ளி வளாகத்தில் போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. முகாமை போக்குவரத்து துறை அமைச்சர் சந்திர பிரியங்கா குத்து விளக்கு ஏற்றி தொடங்கிவைத்து பேசினார்.

இந்த முகாமில் காரைக்கால் மாவட்டத்தில் உள்ள 10 பள்ளிகளை சேர்ந்த 250 மாணவர்கள் பங்கேற்றனர். மாணவர்களுக்கு போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் எதிர்ப்பு, சத்தான உணவுகள், மரங்களின் முக்கியத்துவம், தூய்மையின் அவசியம் குறித்து மாணவர்கள் மற்றும் தன்னார்வலர்களுக்கு விழிப்புணர்வு அளிக்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில், காரைக்கால் மாவட்ட சீனியர் போலீஸ் சூப்பிரண்டு லோகேஸ்வரன், சமுதாய நலப்பணித் திட்டத்தின் மாநில அதிகாரி சதீஷ்குமார், கல்வித்துறையின் மேல்நிலை கல்வி துணை இயக்குனர் ராஜேஸ்வரி, காரை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி ராஜசேகரன், நவோதயா பள்ளி முதல்வர் நந்தகுமார், நாட்டு நலப்பணி திட்ட மாவட்ட ஒருங்கிணைப்பாளர் லட்சுமணபதி, காரை மாவட்ட சமுதாய நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளர் முருகன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.


Next Story