7 உதவி பேராசிரியர்கள் நியமனம்


7 உதவி பேராசிரியர்கள் நியமனம்
x

புதுவை கால்நடை மருத்துவ கல்லூரியில் நியமிக்கபட்ட 7 உதவி பேராசிரியர்களுக்கு முதலமைச்சர் ரங்கசாமி பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

புதுச்சேரி,

புதுவை குரும்பாப்பட்டில் ராஜீவ்காந்தி கால்நடை மருத்துவக்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனத்தில் உதவி பேராசிரியர்கள் பணிக்கு தேர்வு நடத்தப்பட்டு 7 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கு முதல்-அமைச்சர் ரங்கசாமி தனது அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

அப்போது வேளாண் அமைச்சர் தேனீ.ஜெயக்குமார், கால்நடை மருத்துவ கல்லூரி டீன் வீராசாமி செழியன் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.


Next Story