போக்குவரத்து துறை செயலாளர் நியமனம்


போக்குவரத்து துறை செயலாளர் நியமனம்
x

புதுவையில் போக்குவரத்து துறை செயலாளர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

புதுச்சேரி

புதுச்சேரி கவர்னர் வழிகாட்டுதலின் பேரில் தலைமை செயலாளர் ராஜீவ் வர்மா வெளியிட்டுள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:-

ஐ.ஏ.எஸ். அதிகாரி முத்தம்மா கடந்த 18.7.2022 அன்று புதுவை அரசு பணியில் தன்னை இணைத்துக்கொண்டார். அவருக்கு போக்குவரத்து, தொழிலாளர் துறை, அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் சுற்றுச்சூழல் துறை, தீயணைப்பு துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தொழிலாளர் துறை ஆணையர் பொறுப்பும் வகிப்பார். இவர் உடனடியாக போக்குவரத்து செயலாளராக பதவியேற்க வேண்டும். தற்போது பணியில் உள்ள அரசு செயலாளர்கள் சுந்தரேசன், ஸ்மிதா ஆகியோர் இடமாறுதலாகி சென்ற உடன் இதர பொறுப்புகளை இவர் ஏற்றுக்கொள்வார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story