அரிச்சுவடி மனநல மைய 12-ம் ஆண்டு தொடக்க விழா


அரிச்சுவடி மனநல மைய 12-ம் ஆண்டு தொடக்க விழா
x

அரியாங்குப்பத்தில் அரிச்சுவடி மனநல மைய 12-ம் ஆண்டு தொடக்க விழா நடந்தது.

புதுச்சேரி

புதுவை அரியாங்குப்பம் அரிச்சுவடி மனநல மைய 12-ம் ஆண்டு தொடக்க விழா நடந்தது. மைய இயக்குனர் இளவழகன் வரவேற்றார். விழாவில் சிறப்பு விருந்தினராக சபாநாயகர் செல்வம் கலந்துகொண்டு கேக் வெட்டினார். அதைத்தொடர்ந்து அவர், அங்கு பணியாற்றும் ஊழியர்களுக்கு பரிசுகள் வழங்கினார். பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடந்தன. இதற்கான ஏற்பாடுகளை அரிச்சுவடி மனநல மைய ஊழியர்கள் செய்திருந்தனர். முடிவில் ஆத்திச்சுடி சிறப்பு பள்ளி தாளாளர் சத்தியவாணன் நன்றி கூறினார்.


Next Story