அசோகர் சிலை யாத்திரைக்கு வரவேற்பு

புதுவை கடற்கரை சாலையில் அசோகர் சிலை யாத்திரைக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.
புதுச்சேரி
அமைதி மற்றும் சகோதரத்துவத்தை வலியுறுத்தி சபரிமலையில் இருந்து, நாக்பூர் தீட்சா பூமி வரை அசோகர் சிலை யாத்திரை (தம்ம யாத்திரை) தொடங்கியது. இந்த யாத்திரை தமிழ்நாடு வழியாக புதுச்சேரி வந்தது.
இந்த யாத்திரைக்கு கடற்கரை சாலையில் உள்ள அம்பேத்கர் மணிமண்டபம் அருகில் வரவேற்பு அளிக்கப்பட்டது. இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் புதுவை மாநில முதன்மை செயலாளர் தேவபொழிலன், பொதுச்செயலாளர் சிந்தனைச் செல்வன், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் சலீம், மார்க்சிஸ்ட் கட்சியின் செயலாளர் ராஜாங்கம், ம.தி.மு.க. பொறுப்பாளர் கபிரியேல் மற்றும் பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து இந்த யாத்திரை புதுவையில் இருந்து சென்னைக்கு புறப்பட்டு சென்றது. இந்த யாத்திரை வருகிற 22-ந் தேதி நாக்பூர் சென்று சேருகிறது.
Related Tags :
Next Story






