ஓட்டல் ஊழியர் மீது தாக்குதல்


ஓட்டல் ஊழியர் மீது தாக்குதல்
x

புதுவையில் ஓட்டல் ஊழியர் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்,

புதுச்சேரி

கடலூர் திருப்பாதிரிபுலியூர் ஸ்ரீதேவி நகரை சேர்ந்தவர் தேவராஜ். அவரது மகள் மோஷ்மி (வயது 37). இவர் அண்ணா சாலையில் உள்ள ஒரு ஓட்டலில் வரவேற்பாளராக பணிபுரிந்து வருகிறார். நேற்று மாலை மோஷ்மி பணி முடிந்து சொந்த ஊருக்கு செல்வதற்காக அண்ணா சாலை நேரு வீதி சந்திப்பில் நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது மோஷ்மியுடன் வேலை பார்க்கும் சிவராமன் என்பவரின் மனைவி ஜெயசுதா மற்றும் அவரது குடும்பத்தினர் மோஷ்மியை வழிமறித்துள்ளனர். ஜெயசுதாவின் வாழ்க்கையை ஏன் கெடுக்கிறாய்? என்று தகராறில் ஈடுபட்டனர். மேலும் அவரை தாக்கி மிரட்டல் விடுத்துள்ளனர். இதுகுறித்த புகாரின்பேரில் ஜெயசுதா அவரது சகோதரர் லோகேஷ் உள்பட 4 பேர் மீது பெரியகடை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.Next Story