மனைவியை தாக்கி கொலை மிரட்டல்


மனைவியை தாக்கி கொலை மிரட்டல்
x

பாகூர் அடுத்த கரையாம்புத்தூரில் குடும்ப நடத்த வராத மனைவியைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த கணவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பாகூர்

பாகூர் அடுத்த கரையாம்புத்தூர் பூந்தோட்ட நகர் பகுதியை சேர்ந்தவர் விசாலாட்சி (வயது 36). குருவிநத்தம் அரசு உயர்நிலைப்பள்ளியில் பல்நோக்கு ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கும் உள்ளேரிப்பட்டு கிராமத்தை சேர்ந்த வெங்கடேசன் (40) என்பவருக்கும் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. வெங்கடேசன் கடலூர் அரசு மருத்துவமனையில் ஊழியராக வேலை செய்து வருகிறார்.

இந்தநிலையில் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிாிந்து வாழ்கின்றனர். இன்று பள்ளியில் பணியில் இருந்த விசாலாட்சியை தன்னுடன் குடும்பம் நடத்த வருமாறு வெங்கடேசன் அழைத்துள்ளார். ஆனால் அவர் வர மறுக்கவே ஆத்திரம் அடைந்த வெங்கடேசன் விசாலாட்சியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின்பேரில் பாகூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நந்தகுமார், உதவி சப்-இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story