5 பள்ளிவாசல்களுக்கு தலா ரூ.10 ஆயிரம் உதவி

உப்பளம் தொகுதிக்குட்பட்ட 5 பள்ளிவாசல்களுக்கு தலா ரூ.10 ஆயிரம் நிதிஉதவி வழங்கப்பட்டது.
புதுச்சேரி
உப்பளம் தொகுதிக்குட்பட்ட குத்பா பள்ளி வாசல், முஹம்மதியா பள்ளி வாசல், முவஹீதியா பள்ளி வாசல், மிராபள்ளி வாசல் மற்றும் பூராப் பள்ளி வாசல் ஆகிய 5 பள்ளி வாசல்களுக்கு ரம்ஜான் நோன்பு கஞ்சிக்காக தலா ரூ.10 ஆயிரம் வீதம் ரூ.50 ஆயிரத்திற்கான காசோலையை தொகுதி எம்.எல்.ஏ. அனிபால் கென்னடி வழங்கினார். நிகழ்ச்சியில் புதுச்சேரி மாநில வக்பு வாரிய உறுப்பினர்கள் சையத் அஹமது மொய்தீன், பசிலா பாத்திமா, வக்பு அதிகாரி முஹமது இஸ்மாயில், முத்தவல்லிகள் ஹாஜாமொய்தீன், ஷேக் அப்துல் கப்பார், முஹம்மது ரபி, முஹம்மது அமீன், முஹமது முசாதிக் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story






