தனியார் வங்கி மேலாளர், ஊழியர்கள் மீது தாக்குதல்


தனியார் வங்கி மேலாளர், ஊழியர்கள் மீது தாக்குதல்
x

காரைக்காலில் கடனுக்காக நிலத்தை அளவிட சென்ற தனியார் வங்கி மேலாளர், ஊழியர்களை தாக்கிய விவசாயியை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

காரைக்கால்

கடனுக்காக நிலத்தை அளவிட சென்ற தனியார் வங்கி மேலாளர், ஊழியர்களை தாக்கிய விவசாயியை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

தனியார் வங்கி மேலாளர்

நாகை மாவட்டம் வெளிப்பாளையத்தை சேர்ந்தவர் செந்தில்குமார். நாகூரில் உள்ள தனியார் வங்கியில் காரைக்கால் மாவட்டம் கோட்டுச்சேரி ராயன்பாளையத்தில் உள்ள தனது நிலத்தை அடமானம் வைத்து தொழில் செய்ய கடன் உதவி கேட்டு விண்ணப்பித்து இருந்தார்.

அதன்படி, கடன் வழங்குவதற்கு முன் களஆய்வு செய்வதற்காக வங்கி கிளை மேலாளர் விஜயசக்ரவர்த்தி (வயது 38), வங்கி ஊழியர்கள் சதீஷ் (37), அரவிந்த் (27) ஆகியோர் காரைக்கால் ராயன்பாளையத்தில் உள்ள செந்தில்குமார் குறிப்பிட்ட நிலத்தை அளவிட நேற்று சென்றனர்.

தாக்குதல்

அப்போது அங்கு வந்த கோட்டுச்சேரியை சேர்ந்த விவசாயி பிரகாஷ் (48), இது தனது இடம் என்றும், எதற்காக என்னை கேட்காமல் அளக்க வந்தீர்கள் என ஆபாசமாக திட்டியுள்ளார். இதனை வங்கி மேலாளர் தட்டிக்கேட்டதால், ஆத்திரமடைந்த பிரகாஷ், வங்கி மேலாளரை உருட்டுகட்டையால் தாக்கினார். இதை தடுக்க முயன்ற ஊழியர்கள் 2 பேரும் தாக்கப்பட்டனர். இதில் காயமடைந்த 3 பேரும் காரைக்கால் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றனர்.

இந்த தாக்குதல் குறித்து வங்கி மேலாளர் அளித்த புகாரின்பேரில் கோட்டுச்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரகாசை வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story