விவசாயியை தாக்கி கொலை மிரட்டல்


விவசாயியை தாக்கி கொலை மிரட்டல்
x

தேங்காய்திட்டை சேர்ந்த விவசாயியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த 2 வாலிபர்கள் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை.

புதுச்சேரி

புதுவை தேங்காய்திட்டை சேர்ந்தவர் அருண்குமார் (வயது 40). விவசாயி. இவரது நிலத்தில் நெட்டப்பாக்கத்தை சேர்ந்த கோகுலகிருஷ்ணன் (35), குணால் (32) ஆகியோர் அத்துமீறி நுழைந்ததாக கூறப்படுகிறது.

இதனை அருண்குமார் தட்டிக்கேட்டார். இதனால் ஆத்திரமடைந்த கோகுலகிருஷ்ணன், குணால் ஆகியோர் அருண்குமாரை தாக்கி கொலைமிரட்டல் விடுத்ததாக தெரிகிறது.

இதுகுறித்த புகாரின்பேரில் கோகுலகிருஷ்ணன், குணால் ஆகியோர் மீது முதலியார்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

1 More update

Next Story