விழிப்புணர்வு நிகழ்ச்சி


விழிப்புணர்வு நிகழ்ச்சி
x

கோட்டுச்சேரி அம்பகரத்தூர் சுகாதாரம் மற்றும் நல்வாழ்வு மையத்தின் சார்பில் கோடைகால விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

கோட்டுச்சேரி

அம்பகரத்தூர் சுகாதாரம் மற்றும் நல்வாழ்வு மையத்தின் சார்பில் அதிக சூரிய வெப்பத்தால் உருவாகும் அயற்சி மற்றும் பக்கவாதத்தை தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி சுகாதார நிலைய வளாகத்தில் நடந்தது. செவிலிய அதிகாரி சிஸ்லி ரோஸ்லின் வரவேற்றார். மருத்துவ அதிகாரி அரவிந்த தலைமை தாங்கி பேசுகையில்,' சூரிய வெப்பத்தில் இருந்து பொதுமக்கள் தங்களை பாதுகாத்து கொள்ள மெல்லிய பருத்தி ஆடைகளை அணிய வேண்டும், வெளியில் செல்லும் போது குடை தொப்பு, கண்ணாடி அணிந்து செல்ல வேண்டும் என்றார். தொடர்ந்து பொதுமக்களுக்கு சூரிய வெப்பத்தால் உருவாகும் அயற்சி மற்றும் பக்கவாதத்தை தடுப்பதற்கான விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வினியோகம் செய்யப்பட்டது. இதில் கிராமப்புற செவிலியர் பரமேஸ்வரி, சுகாதார உதவி ஆய்வாளர் அய்யனார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story