மருந்து பொருட்கள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி

குயவர்பாளையம் சித்தா ஆராய்ச்சி மையத்தில் மருந்து பொருட்கள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
புதுச்சேரி
மருந்து பொருட்கள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி குயவர்பாளையத்தில் உள்ள சித்தா மண்டல ஆராய்ச்சி மையத்தில் நடந்தது. சித்த மருத்துவத்துறை உதவி இயக்குனர் சத்தியராஜேஸ்வரன் வரவேற்று பேசினார். ஆய்வு அதிகாரி ரத்தினமாலா மருந்து பொருட்கள் தொடர்பான விளம்பரங்கள் குறித்து விளக்கினார்.
புதுவை மருந்து கட்டுப்பாட்டுத்துறை சார்பில் இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து மருந்து கட்டுப்பாட்டு அதிகாரி அனந்தகிருஷ்ணன் விளக்கினார். இந்த நிகழ்ச்சியில் சித்த மருத்துவத்துறை இயக்குனர் ஸ்ரீதரன், இளநிலை ஆய்வு அதிகாரி ஷகிலா பானு உள்பட பலர் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story






