ரீ-சார்ஜ் செய்ய பணம் தராததால் பிளஸ்-1 மாணவர் தற்கொலை


ரீ-சார்ஜ் செய்ய பணம் தராததால் பிளஸ்-1 மாணவர் தற்கொலை
x

செல்போனில் ‘கேம்’ விளையாட ரீ-சார்ஜ் செய்ய தாயார் பணம் தராததால் பிளஸ்-1 மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

அரியாங்குப்பம்

செல்போனில் 'கேம்' விளையாட ரீ-சார்ஜ் செய்ய தாயார் பணம் தராததால் பிளஸ்-1 மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

பிளஸ்-1 மாணவர்

அரியாங்குப்பம் அடுத்த வீராம்பட்டினம் பாரதிதாசன் வீதி நடுத்தெருவை சேர்ந்தவர் பச்சவள்ளி. இவரது கணவர் அருள்தாஸ். இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மீன்பிடி படகில் அடிபட்டு இறந்து விட்டார். இவர்களுக்கு கமலேஷ் (வயது 17), ரிஸ்வான் (11) என 2 மகன்கள் உள்ளனர். கணவர் இறந்த பின்னர், தனது 2 மகன்களுடன் வாடகை வீட்டில் வசித்து வரும் அவர், புதுச்சேரி துணிக்கடை கேண்டீனில் பணி புரிந்து வருகிறார்.

மூத்த மகன் கமலேஷ், புதுச்சேரியில் உள்ள வ.உ.சி. அரசு பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்துள்ளார். இவர் வீட்டில் இருக்கும் நேரங்களில் செல்போனில் ஆன்லைன் மூலம் 'கேம்' விளையாடி வந்ததாக கூறப்படுகிறது.

தற்கொலை

வழக்கம்போல் நேற்று இரவு வெகு நேரமாக கேம் விளையாடிக் கொண்டிருந்தார். நிலையில் இன்று காலை செல்போனுக்கு ரீ-சார்ஜ் பண்ணுவதற்காக தாயார் பச்சைவள்ளியிடம் பணம் கேட்டுள்ளார். அதற்கு அவர், வேலைக்கு சென்று விட்டு மாலையில் வந்து தருகிறேன் என்று கூறிவிட்டு வேலைக்கு சென்றுள்ளார். விடுமுறை நாளான இன்று, வீட்டிலிருந்தும் செல்போனில் கேம் விளையாட முடியாத காரணத்தால் மன வேதனையில் இருந்த கமலேஷ், வீட்டில் இருந்த புடவையால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து அரியாங்குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.


Next Story