கருப்பு நிறத்துக்கு தடை


கருப்பு நிறத்துக்கு தடை
x

ஜனாதிபதி திரவுபதி முர்மு வருகையொட்டி ஜிப்மர் கலையரங்கத்தில் நடந்த நிகழ்ச்சியில் கருப்பு நிறப்பொருட்களுக்கு தடை விதித்தனர்

புதுச்சேரி

புதுவை வந்த ஜனாதிபதி திரவுபதி முர்மு ஜிப்மர் கலையரங்கத்தில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்றார். இந்த நிகழ்ச்சிக்காக மாணவ, மாணவிகள் பள்ளிகளில் இருந்து அழைத்து வரப்பட்டனர். அவர்கள் கருப்பு நிற கைக்குட்டைகள் உள்ளிட்டவற்றை எடுத்து செல்ல போலீசார் தடைவிதித்தனர்.

சில மாணவ, மாணவிகள் தங்களது கைகள், கழுத்தில் கருப்பு கயிறு கட்டியிருந்தனர். அவற்றை வெட்டி அகற்றிய பின்னரே அவர்கள் கலையரங்கத்திற்குள் செல்ல போலீசார் அனுமதித்தனர்.


Next Story