ரத்ததான முகாம்


ரத்ததான முகாம்
x

புதுச்சேரியில் அகரம் ரோட்டரி சங்கம் சார்பில் ரத்ததான முகாம் நடந்தது.

புதுச்சேரி

உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு புதுவை அகரம் ரோட்டரி சங்கம், பல்கலைக்கழக சுற்றுலாத்துறை மற்றும் ஜிப்மர் ரத்த வங்கியுடன் இணைந்து ரத்ததானம் முகாமை நடத்தின. பல்கலைக்கழக இயக்குனர் டாக்டர் தனிக்கரசு முகாமை தொடக்கி வைத்து ரத்ததானத்தின் சிறப்பு குறித்து பேசினார். அகரம் ரோட்டரி சங்க தலைவர் சவுரிராஜன் சிறப்புரை ஆற்றினார். முகாமில் 200-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு ரத்ததானம் செய்தனர்.

முகாமில் பல்கலைக்கழக முன்னாள் டீன் வெங்கட்ராமன், தங்க மணிமாறன், அகரம் சங்க செயலாளர் டாக்டர் பூவிழி, நிர்வாகிகள் தையல்நாயகி, டாக்டர் துவினிஷா, தமிழ்ச்செல்வம், ரோட்டரி சங்க உறுப்பினர்கள், கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை ஜிப்மர் மருத்துவமனை ரத்தவங்கி டாக்டர் வடிவேலு செய்திருந்தார்.


Next Story