ரத்ததான முகாம்


ரத்ததான முகாம்
x

திருபுவனை சுப்ரீம் தொழிற்சாலையில் ரத்ததான முகாம் நடந்தது.

திருபுவனை

பிளாஸ்டிக் பொருட்கள் உற்பத்தியில் முன்னணி வகிக்கும் சுப்ரீம் தொழிற்சாலை,எச்.டி.எப்.சி. வங்கி, ஜிப்மர் ரத்த சேகரிப்பு மையம் இணைந்து நடத்திய ரத்ததான முகாம் சன்னியாசிக்குப்பத்தில் உள்ள சுப்ரீம் தொழிற்சாலை வளாகத்தில் நடைபெற்றது. சுப்ரீம் நிறுவனத்தின் துணை தலைவர் உதய்வைத்தியா கலந்துகொண்டு முகாமை தொடங்கி வைத்தார்.

நிறுவனத்தின் பொதுமேலாளர் பாலச்சந்தர், வர்த்தக மேலாளர் ராமமூர்த்தி, மனிதவள அதிகாரி ஜான் இமானுவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஜிப்மர் மருத்துவமனை ரத்த மைய மருத்துவர்கள் வடிவேல், சுனில் ஆகியோர் தலைமையிலான மருத்துவக்குழுவினர் சுப்ரீம் தொழிற்சாலை அலுவலர்கள், ஊழியர்கள் என 50-க்கும் மேற்பட்டவர்களிடம் ரத்த தானம் பெற்றனர். முகாமில் வங்கி அதிகாரிகள் சதீஷ் ராஜேந்திரன், வெங்கடேஷ் குருசாமி, யோகேஸ்வரன், ராஜேந்திரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

1 More update

Next Story