பொக்லைன் எந்திர டிரைவர் தற்கொலை

வில்லியனூரில் திருவண்ணாமலையைச் சேர்ந்த பொக்லைன் எந்திர டிரைவர் மனைவி இறந்த வேதனையில் அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
வில்லியனூர்
திருவண்ணாமலை மாவட்டம் சத்தியவாடி பாடசாலை தெருவை சேர்ந்தவர் தங்கராஜ் (35). பொக்லைன் எந்திர டிரைவர். இவரது மனைவி ஜானகி. கர்ப்பிணியாக இருந்த ஜானகி கடந்த 5 மாதத்திற்கு முன் திடீரென இறந்துவிட்டார். மனைவி இறந்த சோகத்தில் தங்கராஜ் மனஉளைச்சலில் இருந்து வந்தார்.
இந்நிலையில் கடந்த வாரம் புதுவை, வில்லியனூர் பகுதியில் பொக்லைன் ஓட்டுவதற்காக வந்தார். அதற்காக, வில்லியனூர் பைபாஸ் சாலை அருகே ஒரு வீட்டை வாடகை எடுத்து தங்கினார். நேற்று அளவுக்கு அதிகமாக மது குடித்துவிட்டு வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். மனைவி இறந்த வேதனையில் அவர் தூக்குப்போட்டு உயிரை மாய்த்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து வில்லியனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story