மின்சாரம் தாக்கி சிறுவன் பலி

காரைக்காலில் தந்தையின் கடையில் மின்சாரம் தாக்கி சிறுவன் பாிதாமாக உயிாிழந்தாா்.
காரைக்கால்
காரைக்கால் அக்கரைவட்டம் அந்தோணியார் கோவில் தெருவைச் சேர்ந்தவர் விஜயசுந்தரம். மதகடி பகுதியில் ஏ.சி., பிரிட்ஜ் பழுதுபார்க்கும் கடை வைத்துள்ளார். அவரது மனைவி பரிமளா. இவர்களுக்கு பிரியதர்ஷன் (வயது 13) என்ற மகனும், ஒரு மகளும் உள்ளனர். பிரியதர்ஷன் தனியார் பள்ளி ஒன்றில் 8-ம் வகுப்பு படித்து வந்தான்.
இந்தநிலையில் விஜயசுந்தரம் வேலை விஷயமாக வெளியில் சென்றுவிட்டார். வீட்டில் இருந்த பிரியதர்ஷன் தனது தந்தையின் கடைக்கு சென்றான். கடையில் விளையாடிகொண்டிருந்தபோது அங்குள்ள மின்சார வயர் ஒன்றில் தவறுதலாக கை வைத்தபோது மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டான். இதில் சுருண்டு விழுந்த அவனை, அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக காரைக்கால் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவனை பரிசோதனை செய்த டாக்டர்கள், பிரியதர்ஷன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து காரைக்கால் நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






