கோவில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு


கோவில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு
x

லாஸ்பேட்டையில் கோவில் உண்டியலை உடைத்து பணம் திருடியவா்களை போலீசாா் தேடி வருகின்றனா்.

புதுச்சேரி

புதுச்சேரி லாஸ்பேட்டை சாந்திநகரில் ரேணுகா பரமேஸ்வரி கோவில் உள்ளது. சம்பவத்தன்று மாலை கோவில் அர்ச்சகர் வழக்கமான பூஜைகளை முடித்து கோவில் கதவை மூடிவிட்டு சென்றார். மறுநாள் காலை வந்து பார்த்தபோது, கோவிலில் இருந்த உண்டியல் உடைக்கப்பட்டு காணிக்கை பணம் திருடப்பட்டு இருந்தது.

இதுகுறித்து கோவில் நிர்வாகி பரமசிவத்திற்கும், லாஸ்பேட்டை போலீசுக்கும் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர். கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, அங்கு பதிவாகி இருந்த தடயங்களை சேகரித்தனர். தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, கோவில் உண்டியல் பணத்தை திருடிச்சென்ற மர்ம ஆசாமிகள் குறித்து விசாரித்து வருகிறார்கள்.

1 More update

Next Story