தாய்ப்பால் வாரவிழா


தாய்ப்பால் வாரவிழா
x

புதுவை அரசு மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறையின் தாய்ப்பால் வார விழா கொண்டாடப்பட்டது.

புதுச்சேரி

புதுவை அரசு மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறையின் ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டு திட்டம் அரியாங்குப்பம் வட்டாரம் சார்பில் உலக தாய்ப்பால் வாரவிழா காமராஜர் திருமண மண்டபத்தில் நடந்தது. பாஸ்கர் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார். சபாநாயகர் செல்வம் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டார். நிகழ்ச்சியில் தாய்ப்பால் கொடுப்பதால் குழந்தைகளுக்கும், தாய்மார்களுக்கும் ஏற்படும் நன்மைகள் குறித்து விளக்கப்பட்டது. மேலும் சத்துணவுகள் குறித்த உணவு பொருட்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தது. நிகழ்ச்சியில் யுவர் பேக்கர்ஸ் நிறுவனர் கிருஷ்ணராஜூ, குழந்தைகள் மேம்பாட்டு திட்ட அதிகாரி கிளாரா, அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் ரமேஷ், ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் பாக்கியவதி மற்றும் அங்கன்வாடி ஊழியர்கள், பாலூட்டும் தாய்மார்கள், கர்ப்பிணிகள் பலர் கலந்துகொண்டனர்.


Next Story