கடற்கரையில் கருகி வரும் தென்னை மரங்கள்


கடற்கரையில் கருகி வரும் தென்னை மரங்கள்
x

கோடை வெயில் மற்றும் உப்புக்காற்றின் காரணமாக கடற்கரை சாலையில் உள்ள தென்னை மரங்கள் கருகி வருகின்றன.

புதுச்சேரி

கோடை வெயில் மற்றும் உப்புக்காற்றின் காரணமாக கடற்கரை சாலையில் உள்ள தென்னை மரங்கள் கருகி வருகின்றன.

தென்னை மரங்கள்

புதுவை கடற்கரை சாலையை அழகுபடுத்தும் விதமாக அங்கு தென்னை மரங்கள் நடப்பட்டன. இந்த மரங்கள் தற்போது வளர்ந்து காய்த்து தொங்குகின்றன.

தற்போது கோடை வெயில் தொடங்கியுள்ள நிலையில் மதிய வேளைகளில் கடற்கரைக்கு வரும் சுற்றுலா பயணிகளும், பொதுமக்களும் இந்த தென்னை மர நிழலில் நின்று கடற்கரையை ரசித்து பார்க்கின்றனர்.

கருகும் கீற்றுகள்

இந்த தென்னை மரங்களுக்கு அவ்வப்போது டேங்கர் லாரி மூலம் தண்ணீர் ஊற்றப்பட்டு வருகிறது. இத்தகைய நிலையில் வெயில் கொளுத்தி வருவதால் வெப்பம் மற்றும் உப்புக்காற்றின் தாக்கத்தின் காரணமாக தென்னை மரத்தின் கீற்றுகள் கருக தொடங்கியுள்ளன.

இதன் காரணமாக அனைத்து தென்னை மரங்களும் பெரும்பகுதி கருகிய நிலையில் காணப்படுகிறது. அழகுற காட்சியளித்த தென்னை மரங்கள் தற்போது பட்டுப்போய் பரிதாபமாக உள்ளன.

கோடைகாலம் முடியும் வரை தென்னை மரங்களுக்கு நாள்தோறும் தண்ணீர் ஊற்றி அதன் பசுமையை பேணிக்காக்க வேண்டும் என்று கடற்கரைக்கு வரும் பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.

1 More update

Next Story