வணிகர் கூட்டமைப்பினர் கலந்தாய்வு கூட்டம்


வணிகர் கூட்டமைப்பினர் கலந்தாய்வு கூட்டம்
x

புதுவையில் வணிகர் கூட்டமைப்பினர் கலந்தாய்வு கூட்டம் நடந்தது.

புதுச்சேரி

புதுச்சேரி வணிகர் கூட்டமைப்பு சார்பாக மேட்டுப்பாளையம் தொழிற்சாலை உரிமையாளர்கள் சங்க கட்டிடத்தில் சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி.) தொடர்பான கலந்தாய்வு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு கூட்டமைப்பின் சேர்மன் சிவசங்கர் தலைமை தாங்கினார். தலைவர் பாபு, முதன்மை துணைத் தலைவர் சீனுவாசன், பொதுச் செயலாளர் முருகபாண்டியன் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

இதில் வணிகவரித் துறை முன்னாள் துணை ஆணையர் ஸ்ரீதர், வணிகவரித்துறை அதிகாரி பாலமுருகன், இந்தியன் வங்கியின் புதுச்சேரி மண்டல முதன்மை மேலாளர் (கடன் பிரிவு) ராதாகிருஷ்ணன், மேட்டுப்பாளையம் கிளை மேலாளர் ஹேம் கிருஷ்ணா பரஸ்கார் ஆகியோர் கலந்து கொண்டு, வங்கி மூலம் வழங்கப்படும் கடன்கள் குறித்து விளக்கி கூறினர். மேலும் 2 ஆண்டுகள் சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி.) செலுத்தியிருந்தால் இந்தியன் வங்கி சார்பாக ரூ.25 லட்சம் வரை எந்தவித பிணை இல்லாமல் கடன் வழங்கப்படும் என்றும் தெரிவித்தனர்.

1 More update

Next Story