கார் மோதி, 2 பெண்டாட்டிக்காரர் பலி


கார் மோதி, 2 பெண்டாட்டிக்காரர் பலி
x

பாகூர்

கிருமாம்பாக்கம் அடுத்த பனித்திட்டு கங்கை அம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் சிவசக்கரவர்த்தி (வயது 44). இவர் பல் மருத்துவ சேவைக்கான நாற்காலிகள் செய்து விற்பனை செய்து வந்தார். இவர் சொந்த வேலை காரணமாக, மோட்டார் சைக்கிளில் புதுச்சேரி சென்று விட்டு பின்னர் நேற்று இரவு வீடு திரும்பினார். தவளக்குப்பம் அடுத்த இடையார்பாளையம் ஓசன் பார்க் அருகே சென்று கொண்டிருந்தபோது, கடலூரில் இருந்து புதுச்சேரி நோக்கி வந்த கார் மோட்டார் சைக்கிள் மீது வேகமாக மோதியது.

இந்த விபத்தில் தூக்கிவீசப்பட்ட சிவசக்கரவர்த்தி, சாலை ஓரத்தில் விழுந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். அதே வேளையில் மோதிய வேகத்தில் கார் சாலையோர பள்ளத்தில் விழுந்து கவிழ்ந்தது. காரின் ஏர்பேக் ஓப்பன் ஆனதால் காரில் இருந்த 2 பேரும் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தனர்.

விபத்து குறித்து கிருமாம்பாக்கம் போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விபத்தில் இறந்த சிவசக்கரவர்த்தியின் முதல் மனைவி பிரிந்து சென்றுவிட்டார். அவருக்கு ஒரு மகனும் உள்ளான். இந்த நிலையில் சிவசக்கரவர்த்தி வேறு ஒரு பெண்ணை 2-வது திருமணம் செய்து கொண்டார். தற்போது அப்பெண் நிறைமாத கர்ப்பிணியாக இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

1 More update

Next Story