செல்போன் வைத்திருந்த 2 கைதிகள் மீது வழக்கு

புதுவை காலாப்பட்டு மத்திய சிறையில் செல்போன் வைத்திருந்த 2 கைதிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
புதுச்சேரி
காரைக்காலில் போலி நகையை வங்கி மற்றும் தனியார் நிதி நிறுவனத்தில் அடமானம் வைத்து மோசடி செய்த வழக்கில் காரைக்காலை சேர்ந்த ரிபாத் கமில் என்பவர் கைது செய்யப்பட்டு காலாப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். அவர், சிறையில் இருந்தபடி செல்போனில் தனது கூட்டாளிகளுடன் பேசுவதாக வந்த தகவலின் பேரில் சிறை கண்காணிப்பாளர் பாஸ்கர் கைதிகளின் அறையில் கடந்த 7-ந் தேதி சோதனையிட்டார். அப்போது ரிபாத் கமில் மற்றும் ஆயுதம் வைத்திருந்ததாக உருளையன்பேட்டை போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள குட்டி சிவா ஆகியோர் உள்ள அறையில் செல்போன் மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த செல்போனை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக சிறை கண்காணிப்பாளர் பாஸ்கரன் காலாப்பட்டு போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோ மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.