சென்னை வாலிபர் மீது 8 பிரிவுகளில் வழக்கு

புதுவையில் தாறுமாறாக கார் ஓட்டி விபத்து ஏற்படுத்திய சென்னை வாலிபர்கள் மீது 8 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
புதுச்சேரி
சென்னை மேடவாக்கம் பகுதியை சேர்ந்த எபினேசர் (வயது 20), திலிப் (27), அசிக் (21), ஸ்ரீநாத் (25), சுனில் (22) ஆகியோர் நேற்று புதுவைக்கு சுற்றுலா வந்திருந்தனர். அவர்கள் மதுபோதையில் காரை ஒருவழிப்பாதையில் எதிர்திசையில் காரை தாறுமாறாக ஓட்டினார்கள். இதில் அந்த வழியாக சென்ற இருசக்கர வாகனங்கள் மீது கார் மோதியதில் 10-க்கும் மேற்பட்ட வாகனங்கள் சேதமடைந்தன.
காரில் சென்றவர்களை லாஸ்பேட்டை விமான நிலையம் பின்புறம் வைத்து பொதுமக்கள் பிடித்து தர்மஅடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர். இது குறித்த புகாரின் பேரில் கார் ஓட்டிய சுனில் என்பவர் மீது 8 பிரிவுகளின் கீழ் கிழக்கு பகுதி போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
Related Tags :
Next Story






