கட்டிட தொழிலாளர்களிடம் பணம், செல்போன் பறிப்பு


கட்டிட தொழிலாளர்களிடம் பணம், செல்போன் பறிப்பு
x

ஆயுதங்களை காட்டி கட்டிட தொழிலாளர்களிடம் பணம், செல்போன் பறிக்கப்பட்டது.

வானூர்

ஆயுதங்களை காட்டி கட்டிட தொழிலாளர்களிடம் பணம், செல்போன் பறிக்கப்பட்டது.

பணம், செல்போன் பறிப்பு

புதுவையை அடுத்த தமிழக பகுதியான கோட்டக்குப்பம் அருகே உள்ள கீழ்புத்துப்பட்டு மெயின் ரோட்டில் புதிதாக கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. இதற்காக மேற்குவங்க மாநிலத்தைச் சேர்ந்த கட்டிட தொழிலாளர்கள் ஏராளமானோர் தங்கியிருந்து கட்டுமான பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

நேற்று இரவு வேலை முடித்துவிட்டு 8 தொழிலாளர்கள், கீழ் புத்துப்பட்டு மெயின் ரோட்டில் உள்ள சாலையோரத்தில் படுத்து தூங்கிக் கொண்டிருந்தனர். நள்ளிரவில் 3 மோட்டார் சைக்கிள்களில் வந்த 6 பேர் கொண்ட கும்பல் இரும்பு கம்பி உள்ளிட்ட ஆயுதங்களை காட்டி தொழிலாளர்களிடம் இருந்து ரூ.2 ஆயிரத்து 100 மற்றும் 7 செல்போன்களை பறித்து கொண்டு தப்பி சென்றனர்.

2 பேரை பிடித்து விசாரணை

இதுகுறித்து பாதிக்கப்பட்டவர்கள் கோட்டக்குப்பம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராபின்சன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். மேலும் அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் புதுச்சேரி வம்பாகீரப்பாளையத்தை சேர்ந்த விக்னேஷ் (வயது 18), சண்முகாபுரத்தை சேர்ந்த மணிவண்ணன் (19) ஆகிய 2 பேரை சந்தேகத்தின் பேரில் பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story