ஊர்க்காவல் படை வீரர்களுக்கு சான்றிதழ்


ஊர்க்காவல் படை வீரர்களுக்கு சான்றிதழ்
x

கோரிமேடு

புதுவை காவல்துறையில் 19 பேருக்கு கருணை அடிப்படையில் ஊர்க்காவல் படை வீரர்களாக கடந்த பிப்ரவரி மாதம் பணி வழங்கப்பட்டது. அவர்களுக்கு கோரிமேடு காவலர் பயிற்சி பள்ளியில் 3 மாதம் பயிற்சிகள் வழங்கப்பட்டன.

அவர்களுக்கான பயிற்சி முடிவடைந்த நிலையில் நிறைவு விழா கோரிமேடு மைதானத்தில் நடந்தது. அப்போது ஊர்க்காவல் படை வீரர்களின் அணிவகுப்பு நடந்தது. அதனை சீனியர் போலீஸ் சூப்பிரண்டு பிரிஜேந்திரகுமார் யாதவ் ஏற்றுக்கொண்டு, அவர்களுக்கு சான்றிதழ் வழங்கினார். அதன்பின் ஊர்க்காவல் படையினர் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். அதைத்தொடர்ந்து அவர் களது வீரசாகச நிகழ்ச்சிகளும் இடம் பெற்றன. நிகழ்ச்சியில் போலீஸ் சூப்பிரண்டுகள் ரங்கநாதன், சரவணன், இன்ஸ்பெக்டர் ரகுபதி உள்பட பலர் கலந்துகொண்டனர்.


Next Story