திருநள்ளாறு சனீஸ்வரர் கோவிலில் இன்று தேரோட்டம்


திருநள்ளாறு சனீஸ்வரர் கோவிலில் இன்று தேரோட்டம்
x

திருநள்ளாறு சனீஸ்வரர் கோவிலில் பிரமோற்சவ விழாவையொட்டி செவ்வாய்க்கிழமை தேரோட்டம் நடக்கிறது.

திருநள்ளாறு

திருநள்ளாறு சனீஸ்வரர் கோவிலில் பிரமோற்சவ விழாவையொட்டி செவ்வாய்க்கிழமை தேரோட்டம் நடக்கிறது.

தங்க ரிஷப வாகனம்

காரைக்காலை அடுத்த திருநள்ளாறில் உலகப் பிரசித்தி பெற்ற சனீஸ்வரர் கோவில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது. விழாவை முன்னிட்டு தினமும் சாமிக்கு சிறப்பு அபிசேகம், தீபாராதனை நடந்து வருகிறது. விதவிதமான அலங்காரத்தில் சாமி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்து வருகிறார்கள்.

பிரம்மோற்சவ விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றாக மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் தங்க ரிஷப வாகனத்தில் பிரணாம்பாள் சமேத தர்பாரண்யேஸ்வரர் மற்றும் விநாயகர், சுப்ரமணியர், சண்டிகேஸ்வரர் எழுந்தருளினர்.

இன்று தேரோட்டம்

தொடர்ந்து மகா தீபாராதனைக் காட்டப்பட்டு பஞ்சமூர்த்திகள் சகோபுர வீதியுலா நடைபெற்றது. நிகழ்ச்சியில் கோவில் நிர்வாக அதிகாரி அருணகிரிநாதன், கோவில் கட்டளை விசாரணை கந்தசாமி தம்பிரான் சாமிகள் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

பிரம்மோற்சவ விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக தேரோட்டம் வரும் செவ்வாய்க்கிழமை அதிகாலை 5.30 மணிக்கு நடைபெறவுள்ளது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்கிறார்கள்.


Next Story