குழந்தைகள் தின கொண்டாட்டம்


குழந்தைகள் தின கொண்டாட்டம்
x

ஸ்ரீ அரவிந்தர் மேல்நிலைப்பள்ளியில் குழந்தைகள் தின கொண்டாடப்பட்டது.

புதுச்சேரி

முத்தியால்பேட்டை ஸ்ரீஅரவிந்தர் மேல்நிலைப்பள்ளியில் இன்று குழந்தைகள் தினவிழா கொண்டாடப்பட்டது. பள்ளி நிர்வாகியும் முதல்வருமான அரவிந்தகுமார் வரவேற்று பேசினார். நிகழ்ச்சியில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான மாறுவேடப்போட்டி நடந்தது. இதில் மாணவ-மாணவிகள் பாரதியார், ஜவகர்லால் நேரு உள்ளிட்ட தேசியத்தலைவர்களின் வேடங்கள் அணிந்து ஆர்வமுடன் கலந்து கொண்டனர். நடுவர்களாக தவமணி, விஜயா பணியாற்றினர். விழா முடிவில் மாறுவேடப்போட்டியில் பங்கேற்ற அனைத்து மாணவர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. விழாவில் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர் திரளாக கலந்து கொண்டனர்.

1 More update

Next Story