குழந்தைகள் தின கொண்டாட்டம்


குழந்தைகள் தின கொண்டாட்டம்
x

காைரக்காலில் ஜவகர்லால் நேரு அரசு பள்ளியில் குழந்தைகள் தின விழா கொண்டாடப்பட்டது.

காரைக்கால்

காரைக்காலை அடுத்த நெடுங்காடு பண்டித ஜவகர்லால் நேரு அரசு மேல்நிலைப் பள்ளியில், மறைந்த பிரதமர் நேருவின் பிறந்த தினம் குழந்தைகள் தினமாக இன்று கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு புதுச்சேரி போக்குவரத்துத்துறை அமைச்சர் சந்திரபிரியங்கா தலைமை தாங்கினார். பின்னர், அவர் பள்ளியில் அமைந்துள்ள நேருவின் உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து, மாணவ, மாணவிகளுக்கு இனிப்புகள் வழங்கினார். நிகழ்ச்சியில் பள்ளி துணை முதல்வர் சித்ரா மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர். முடிவில், பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு, திருக்குறள் புத்தகம், சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

1 More update

Next Story