பொதுமக்கள் திடீர் சாலை மறியல்


பொதுமக்கள் திடீர் சாலை மறியல்
x

குழாய் உடைப்பால் குடிநீர் வினியோகம் பாதிக்கப்பட்டதால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

மூலக்குளம்

குழாய் உடைப்பால் குடிநீர் வினியோகம் பாதிக்கப்பட்டதால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

குழாய் உடைப்பு

புதுவை அரும்பார்த்தபுரம் பகுதியில் வில்லியனூர் மெயின் ரோட்டில் இருபுறங்களிலும் கழிவுநீர் வாய்க்கால் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதன்காரணமாக தக்ககுட்டை பகுதிக்கு செல்லும் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதனால் அந்த பகுதியில் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டதால் பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

சாலை மறியல்

இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் இன்று புதுச்சேரி-வில்லியனூர் மெயின்ரோட்டில் தக்ககுட்டை பகுதியில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சாலையின் இருபுறங்களிலும் வாகனங்கள் அணிவகுத்து நின்றன.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் பொதுப்பணித்துறை அதிகாரிகள், போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். குழாய் உடைப்பு சரிசெய்து உடனடியாக குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதி அளித்தனர். இதை ஏற்றுக்கொண்ட பொதுமக்கள் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

1 More update

Next Story