பொதுமக்கள் திடீர் சாலை மறியல்


பொதுமக்கள் திடீர் சாலை மறியல்
x

புதுவை சாமிப்பிள்ளைத்தோட்டம் பகுதியில் தரமற்ற குடிநீர் வினியோகத்தை கண்டித்து பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

புதுச்சேரி

புதுவை சாமிப்பிள்ளைதோட்டம் அணைக்கரை மேடு பகுதியில் பொதுமக்களுக்கு வினியோகிகப்படும் குடிநீர் தரமற்ற முறையில் வருவதாக கூறப்படுகிறது. சில நேரங்களில் குடிநீருடன் புழு, பூச்சிகளும் வருவதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். இதுதொடர்பாக பொதுப்பணித்துறையில் புகார் செய்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லையாம். எனவே தங்கள் பகுதிக்கு தரமான முறையில் குடிநீர் வழங்கக்கோரி அப்பகுதி மக்கள் இன்று பாரதி நகர் பஸ் நிறுத்த பகுதியில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இது குறித்து தகவல் கிடைத்ததும் லாஸ்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சத்யநாராயணா, சப்-இன்ஸ்பெக்டர் அனுஷா பாஷா மற்றும் போலீசார் அங்கு விரைந்து வந்தனர். அவர்கள் மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இருப்பினும் பொதுமக்கள் மறியலை கைவிடவில்லை. இதைத்தொடர்ந்து பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் ராஜேஸ்வரி அங்கு வந்தார். அவர் தரமான குடிநீர் கிடைக்க ஏற்பாடு செய்வதாக உறுதியளித்தார். இதைத்தொடர்ந்து பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.


Next Story