நகர் முழுவதும் நாளை மின்தடை


நகர் முழுவதும் நாளை மின்தடை
x

புதுச்சேரி நகர் முழுமையும் நாளை (செவ்வாய்க்கிழமை) மின்தடை செய்யப்படுகிறது.

புதுச்சேரி

புதுச்சேரி நகர் முழுமையும் நாளை (செவ்வாய்க்கிழமை) மின்தடை செய்யப்படுகிறது.

நகர் முழுவதும் மின் தடை

புதுச்சேரி-வில்லியனூர் துணை மின் நிலையத்தில் நாளை பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. அதனால் இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை புதுச்சேரியின் நகரப்பகுதி முழுவதும் மின்தடை செய்யப்படுகிறது. அதாவது கடற்கரை சாலை முதல் எல்லைப்பிள்ளைச்சாவடி வரையும், அரியாங்குப்பம் முதல் முத்தியால்பேட்டை வரையும் மின்தடை செய்யப்படுகிறது. இந்த தகவலை புதுச்சேரி செயற்பொறியாளர் கனியமுதன் தெரிவித்துள்ளார்.

மேலும் மின்துறை அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

ரெட்டியார்பாளையம்

புதுச்சேரி வில்லியனூர் மின்பாதையில் நாளை பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. அதனால் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை கோபாலன் கடை, முத்துப்பிள்ளை பாளையம், புதுநகர், அம்மா நகர், அன்பு நகர், ஓம்சக்தி நகர், ராதா நகர், பாலாஜி நகர், ஆதித்யா அவன்யு, பிச்சவீரான்பேட், டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர், பாவேந்தர் நகர், சுப்பிரமணியபாரதி, காரைகோவிந்தன் நகர், ரெட்டியார்பாளையம், ஆதிகேசவன் நகர், திருநகர், சரநாராயணன நகர், காவேரி நகர், பெருமாள் ராஜா கார்டன், வாணத்து நகர், அஜீஸ் நகர், அரவிந்தர் நகர், சின்னசாமி நகர், சத்தியசாய் நகர், பாரீஸ் நகர், பாரீஸ் நகர், கோல்டன் அவன்யு, பூமியான்பேட், ஜவகர் நகர், சிவா நகர், பூமியான்பேட் வீட்டு வசதி வாரியம், ராகவேந்திரா நகர், பொன் நகர், அருள் நகர், சுதாகர் நகர், பவழக்காரன்சாவடி, சத்திய சாய் நகர், ஜவகர் நகர், பாவாணர் நகர், சிவா நகர், ஜெயா நகர், புதுநகர், மூகாம்பிகை நகர் ஆகிய பகுதிகளில் மின்தடை செய்யப்படுகிறது.

அரும்பார்த்தபுரம்

இதேபோல் வில்லியனூர-மரப்பாலம் மின்பாதையில் ஜி.என்.பாளையம், நடராஜன் நகர், வெண்ணிசாமி நகர், திருக்குறளார் நகர், வசந்தம் நகர், திருமலை தாயார் நகர், திருமலை வாசன் நகர், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் நகர், தென்றல் நகர், பாலாஜி நகர், வயல்வெளி நகர், அரும்பார்த்தபுரம், தக்ககுட்டை, மூலக்குளம், ஜெ.ஜெ.நகர், அன்னைதெரசா நகர், உழவர்கரை நகர், நண்பர்கள் நகர், சிவகாமி நகர், கம்பன் நகர், மரியாள் நகர், தேவா நகர், உழவர்கரைபேட், செல்லம்பாப்பு நகர், அன்னை நகர், அபிராமி நகர், கல்யாணசுந்தரமூர்த்தி நகர், ஜெயா நகர், கமலம் நகர், அணக்கரை, புதுநகர், ராமலிங்கா நகர், தட்சிணாமூர்த்தி நகர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மின்தடை செய்யப்படுகிறது.

உத்திரவாகினிபேட்

வில்லியனூர் தொழிற்பேட்டை மின்பாதையில் பராமரிப்பு பணி காரணமாக வி.மணவெளி, ஜானகிராமன் நகர், பாரதிதாசன் நகர், கே.வி.நகர், ஐ.ஓ.சி. நகர், கண்ணதாசன் நகர் ஆகிய பகுதிகளும், கணுவாப்பேட் மின்பாதையில் பராமரிப்பு பணிகள் காரணமாக வி.தட்டாஞ்சாவடி மெயின்ரோடு, திருவேணி நகர், தில்லை நகர், அம்பேத்கர் நகர், எஸ்.எஸ்.நகர், பெரியபேட், உத்திரவாகினிபேட், புதுப்பேட், லூர்து நகர், கணுவாப்பேட்டை ஒருபகுதி, ஒதியம்பட்டு, வி.மணவெளி ஒருபகுதி, பாலாஜி நகர், கே.வி.நகர், தண்டுகரை, காமராஜர் நகர், மணிமேகலை நகர், வின்சிட்டி மற்றும் ஆகிய பகுதிகளும் மின்தடை செய்யப்படுகிறது.

கரிக்கலாம்பாக்கம்

அகரம் மின்பாதையில் பராமரிப்பு பணிகள் காரணமாக வில்லியனூர், பத்மினி நகர், வசந்தம் நகர், ஆத்துவாய்க்கால்பேட், திருக்காமேஸ்வரர் நகர், மூர்த்தி நகர், சிவகணபதி நகர், ஆரியப்பாளையம், பாரதி நகர், கண்ணகி நகர், கோட்டை மேடு, எஸ்.எம்.வி.புரம் மேற்கு, பரசுராமபுரம், பெருமாள்புரம், கிருஷ்ணா நகர் ஆகிய பகுதிகளில் மின்தடை செய்யப்படுகிறது.

தெண்டமாநத்தம்-சேதராப்பட்டு மின்பாதையில் பராமரிப்பு பணி காரணமாக காலை 10 மணி முதல் மதியம் 4 மணி வரை தொண்டமாநத்தம், ராமநாதபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மின்தடை செய்யப்படுகிறது. கோர்காடு துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணி காரணமாக காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை கரிக்கலாம்பாக்கம், பெருங்களூர், தனத்துமேடு ஆகிய பகுதிகளில் மின்தடை செய்யப்படுகிறது.

இந்த தகவலை புதுச்சேரி மின்துறை அலுவலகம் தெரிவித்துள்ளது.

1 More update

Next Story