போட்டி தேர்வுகளுக்கு தயாராக பயிற்சி


போட்டி தேர்வுகளுக்கு தயாராக பயிற்சி
x

போட்டி தேர்வுகளுக்கு தயாராக பயிற்சி வகுப்புகளை ரெட்டியார்பாளையத்தில் உள்ள மையத்தில் அமைச்சர் சந்திரபிரியங்கா தொடங்கி வைத்தார்.

புதுச்சேரி

மத்திய தொழிலாளர் அமைச்சகத்தின் கீழ் இயங்கும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான தேசிய வாழ்வாதார மையம் தனியார் பயிற்சி நிறுவனம் மூலம் ரூ.1,000 மாதாந்திர உதவித்தொகையுடன் போட்டித்தேர்வுகளுக்கான பயிற்சியை வழங்குகிறது. இந்த பயிற்சியானது ஒரு வருட காலத்துக்கு அளிக்கப்படுகிறது. 2023-24-ம் ஆண்டிற்கான பயிற்சி வகுப்புகளை ரெட்டியார்பாளையத்தில் உள்ள மையத்தில் அமைச்சர் சந்திரபிரியங்கா இன்று தொடங்கி வைத்தார். அவர் மாணவ, மாணவிகளுக்கு இலவச பயிற்சி புத்தகங்களையும் வழங்கினார்.இந்த நிகழ்ச்சியில் சிவசங்கரன் எம்.எல்.ஏ., ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான தேசிய வாழ்வாதார மைய ஒருங்கிணைப்பாளர் கோட்டூர்சாமி, குளோபல் பயிற்சி நிறுவன இயக்குனர் வெங்கடேசன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

1 More update

Next Story