தீவிரவாதிகள் ஊடுருவலை தடுக்க கடல் பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி


தீவிரவாதிகள் ஊடுருவலை தடுக்க கடல் பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி
x

காரைக்காலில் ‘சாகர் கவாச்’ பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி இன்று நடந்தது.

காரைக்கால்

கடந்த 2008-ல் பாகிஸ்தான் தீவிரவாதிகள் மும்பையில் நடத்திய தாக்குதலை தொடர்ந்து, மத்திய அரசு கடலோர மாவட்டங்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் 'சாகர் கவாச்' என்ற பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சிகளை ஆண்டுதோறும் இரு முறை நடத்தி வருகிறது. இந்த ஆண்டுக்கான முதல் ஒத்திகை நிகழ்ச்சி கடந்த ஜூன் 29, 30 ஆகிய 2 நாட்கள் நடைபெற்றது. இன்று காலை 2-ம் கட்ட கடல் பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி இன்று தொடங்கியது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுப்பிரமணியன் தலைமையில் கடலோர போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் மர்த்தினி மற்றும் போலீசார், மீனவர்கள் படகு மூலம், கடலில் ரோந்து சென்று, தீவிரவாதிகள் ஊடுருவல் ஏதேனும் உள்ளதா? என ஆய்வு செய்தனர்.

அப்போது, கடலில் மீன்பிடித்து கரை திரும்பிய மீனவர்களிடம், கடலில் சந்தேகத்திற்கு இடமாக யாராவது சென்றால் உடனே போலீசாருக்கு தகவல் கொடுக்கவும் அறிவுறுத்தினர்.

மேலும் கடலோர கிராமங்களில் தற்காலிக சோதனை சாவடி அமைத்தும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். இந்த ஒத்திகை நிகழ்ச்சி, நாளையும் (புதன்கிழமை) நடக்கிறது.


Next Story