திருநள்ளாறு சனீஸ்வரர் கோவில் எதிரே இடிந்து விழுந்த தரைப்பாலம்


திருநள்ளாறு சனீஸ்வரர் கோவில் எதிரே இடிந்து விழுந்த தரைப்பாலம்
x

திருநள்ளாறு சனீஸ்வரர் கோவில் எதிரே தரைப்பாலம் இடிந்து விழுந்தது.

காரைக்கால்

திருநள்ளாறு சனீஸ்வரர் கோவில் எதிரே தரைப்பாலம் இடிந்து விழுந்தது.

சனீஸ்வரர் கோவில்

காரைக்காலை அடுத்த திருநள்ளாறு சனீஸ்வரர் கோவில் உள்ளது. பிரசித்தி பெற்ற இந்த கோவிலுக்கு சனிக்கிழமைதோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இந்தநிலையில் இந்த கோவிலின் எதிரே, காரைக்கால்-பேரளம் சாலையில் தரைப்பாலம் சேதமடைந்த நிலையில் காணப்பட்டது.

இதுகுறித்து பொதுமக்கள் பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. நேற்று இரவு திடீரென அந்த தரைப்பாலம் இடிந்து விழுந்தது. நல்ல வேளையாக அந்த சமயத்தில் வாகனங்கள் எதுவும் செல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

போக்குவரத்து துண்டிப்பு

இதையடுத்து போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளதால் கோவிலுக்கு செல்லும் பக்தர்களின் வாகனங்கள் தரைப்பாலத்தில் இருந்து சிறிது தூரம் உள்ள ரிங்ரோடு வழியாக தற்காலிகமாக திருப்பி விடப்பட்டுள்ளது. மேலும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் பழுதடைந்த பாலத்தை அகற்றிவிட்டு, புதிய தரைப்பாலம் அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த ஆண்டு இறுதியில் சனிபெயர்ச்சி விழா வர இருப்பதால், தரைப்பாலத்தை தரமாகவும், விரைவாகவும் அமைக்கவேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story