வாட்ஸ்அப்-பில் வீடியோ அனுப்பிவிட்டு கல்லூரி மாணவி மாயம்

புதுவை மூலக்குளம் பகுதியைச் சேர்ந்த கல்லுாரி மாணவி வாட்ஸ்அப்-பில் வீடியோ அனுப்பிவிட்டு மாயமானது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர்.
மூலக்குளம்
புதுவை மூலக்குளம் பூமியான் பேட்டை சேர்ந்தவர் ஹீரா என்கின்ற ஹரிணி (வயது 21). இவர் தனியார் கல்லூரியில் பேஷன் டெக்னாலஜி 3-ம் ஆண்டு படித்து வருகிறார். தினமும் கல்லூரி பஸ்சில் கல்லூரிக்கு சென்று விட்டு வீடு திரும்புவது வழக்கம். இந்த நிலையில் நேற்று காலை கல்லூரிக்கு சென்றார். இதன்பின் பகல் 11 மணி அளவில் தோழியின் செல்போனில் இருந்து அவரது பாட்டிக்கு வீடியோ ஒன்றை அனுப்பினார். அதில் நான் யாரிடமும் சொல்லாமல் வீட்டை விட்டு செல்கிறேன். திரும்பி வரமாட்டேன் என்று பேசி உள்ளார். மாணவியின் செல்போனுக்கு தொடர்பு கொண்ட போது, அது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. இதுகுறித்து ரெட்டியார்பாளையம் போலீசில் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவி ஹரிணியை தேடி வருகிறார்கள்.
Related Tags :
Next Story