கல்லூரி மாணவரின் உடல் உறுப்புகள் தானம்

விபத்தில் சிக்கி மூளைச்சாவு அடைந்த கல்லூரி மாணவரின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டது.
புதுச்சேரி
விபத்தில் சிக்கி மூளைச்சாவு அடைந்த கல்லூரி மாணவரின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டது.
கல்லூரி மாணவர்
விழுப்புரம் மாவட்டம் மயிலம் அருகே உள்ள வெள்ளியனூர் பகுதியை சேர்ந்தவர் அசோக்குமார். இவரது மகன் சரவணமுத்து (வயது 18). விழுப்புரத்தில் உள்ள கல்லூரியில் படித்து வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு விழுப்புரம் பகுதியில் நடைபெற்ற இருசக்கர வாகன விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்தார்.
உடனே அவர் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் ஆஸ்பத்தியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் நேற்று காலை அவர் திடீரென மூளைச்சாவு அடைந்தார்.
உடல் உறுப்புகள் தானம்
இதனை தொடர்ந்து மாணவரின் உடல் உறுப்புகளை தானம் செய்ய அவரது பெற்றோர் முடிவு செய்தனர். இதனை அவர்கள் ஜிப்மர் மருத்தவர்களிடம் தெரிவித்தனர்.
அதன்படி மாணவரின் இதயம் மற்றும் நுரையீரல் ஜிப்மர் மருத்துவமனையில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் இன்று இரவு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு 2 நோயாளிகளுக்கு அவை பொருத்தப்பட்டது. இதேபோல் கல்லீரல், சிறுநீரகம் ஆகியவை ஜிப்மர் மருத்துவமனையிலேயே 2 நோயாளிகளுக்கு பொருத்தப்பட்டது.






