புதுச்சேரியில் கம்பன் விழா நிறைவு

புதுச்சேரியில் நடைபெற்ற கம்பன் கழக 56-ம் ஆண்டு விழா நிறைவு பெற்றது.
புதுச்சேரி
புதுச்சேரியில் நடைபெற்ற கம்பன் கழக 56-ம் ஆண்டு விழா நிறைவு பெற்றது.
கம்பன் விழா
புதுச்சேரி கம்பன் கழக 56-ம் ஆண்டு விழா 12-ந் தேதி தொடங்கியது. விழாவையொட்டி விழா மலர் வெளியிடப்பட்டு, புதுவை மாநில சிறந்த தமிழ் புலவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. தொடர்ந்து எழிலுரை, தனியுரை, கருத்தரங்கம், இளையோர் அரங்கம், வழக்காடு மன்றம், கவியரங்கம் மற்றும் பட்டிமண்டபம் ஆகியவை நடைபெற்றன.
இறுதி நாளான இன்று காலை 'காட்சியும் மாட்சியும்' என்ற தலைப்பில் சிந்தனை அரங்கமும், 'பொய்மை அரவு' என்ற தலைப்பில் தனியுரையும் நடந்தது.
மேல்முறையீடு
இதைத்தொடர்ந்து மாலை முதல் நாள் பட்டிமண்டபத்தில் 'சேர்ந்தவரும் சிறந்தவர்' குகனே என வழங்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு நிகழ்ச்சி நடந்தது.
இதற்கு பேராசிரியர் அப்துல் காதர், பேராசிரியர் ஞான சுந்தரம், கேசவன் ஐ.ஏ.எஸ். ஆகியோர் நடுவர்களாக செயல்பட்டனர். அறக்கட்டளை பொறுப்பாளர் இசை கலைவன் முன்னிலை வகித்தார். இதில் நோக்கர்கள் சார்பில் சண்முக வடிவேலும், குகன் பாத்திரம் சார்பில் எழிலரசியும், சுக்ரீவன் சார்பில் பழனியப்பனும், வீடணன் சார்பில் மாதுவும், பதிவாளர் பூங்குழலி பெருமாள் ஆகியோரும் பேசினர்.
முடிவில் சேர்ந்தவரும் சிறந்தவர்' குகனே என்று தீர்ப்பு வழங்கப்பட்டு விழா நிறைவு பெற்றது. முடிவில் முன்னாள் சபாநாயகர் சிவக்கொழுந்து நன்றி கூறினார்.