குப்பையில் இருந்து உரம் தயாரிக்க வேண்டும்


குப்பையில் இருந்து உரம் தயாரிக்க வேண்டும்
x

குப்பையிலிருந்து உரம் தயாரிக்க வேண்டும் என்று அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் வேண்டுகோள் விடுத்தார்.

புதுச்சேரி

குப்பையிலிருந்து உரம் தயாரிக்க வேண்டும் என்று அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் வேண்டுகோள் விடுத்தார்.

பயிற்சி முகாம்

புதுவை குரும்பாப்பட்டில் உள்ள பெருந்தலைவர் காமராஜர் வேளாண் அறிவியல் நிலையத்தில் விவசாயிகள், உற்பத்தியாளர்கள் சங்கங்களுக்கு திறன்மிகு மேலாண்மை பற்றிய 5 நாள் பயிற்சி முகாம் ஜெய்ப்பூரில் இயங்கும் மத்திய அரசின் தேசிய வேளாண்மை சந்தைப்படுத்துதல் நிறுவன நிதியுதவியுடன் நடக்கிறது.

இதன் தொடக்க விழாவில் அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் கலந்துகொண்டு முகாமினை தொடங்கிவைத்தார். அப்போது அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் பேசியதாவது:-

குப்பையில் இருந்து உரம்

விவசாயிகள் தாங்கள் விளைவிக்கும் பொருட்களை வியாபாரிகளிடம் விற்பனை செய்து வருகின்றன. இந்த நிலைமை மாறவேண்டும். அவர்கள் தங்களது உற்பத்தி பொருட்களை மதிப்புகூட்டி விற்பனை செய்ய வேண்டும்.

பிற மாநிலங்களில் குப்பைகளில் இருந்து அவர்களேஉரங்களை தயாரித்து கொள்கின்றனர். ஆனால் நாம் குப்பையை அப்புறப்படுத்த பல கோடி செலவு செய்கிறோம்.ரசாயன உரங்களை பயன்படுத்தாமல் நம் மண்ணுக்கு என்ன உரம் வேண்டும் என்பதை கண்டறிந்து உரங்களை நாமே தயாரித்து பயன்படுத்த வேண்டும். குப்பைகளை வீதியில் கொட்டாதீர்கள். குப்பையில் இருந்து கம்போஸ்ட் உரம் தயாரிக்க வேண்டும்.

இவ்வாறு அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் பேசினார்.

விவசாய முறை

ஜெய்ப்பூர் தேசிய வேளாண்மை சந்தைப்படுத்துதல் நிறுவனத்தின் துணை இயக்குனர் சிங் கலந்துகொண்டு விவசாய முறைகள் குறித்து எடுத்துரைத்தார்.

நிகழ்ச்சியல் பெருந்தலைவர் காமராஜர் வேளாண் அறிவியல் நிலையத்தின் திட்ட ஒருங்கிணைப்பாளர் சிவசுப்பிரமணியன், நபார்டு வங்கியின் மாவட்ட வளர்ச்சி மேலாளர் சித்தார்த்தன் மற்றும் புதுச்சேரியை சேர்ந்த விவசாயிகள் உற்பத்தியாளர்கள் சங்க உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.


Next Story