ரூ.35 லட்சம் செலவில் சாலை அமைக்கும் பணி


ரூ.35 லட்சம் செலவில் சாலை அமைக்கும் பணி
x

முத்தியால்பேட்டை தொகுதிக்குட்பட்ட பகுதியில் ரூ 35 லட்சம் செலவில் சாலை அமைக்கும் பணியை பிரகாஷ்குமார் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.

புதுச்சேரி

முத்தியால்பேட்டை தொகுதிக்குட்பட்ட சோலைநகர் தாழை வீதி விரிவாக்கம் பகுதியில் புதிய சிமெண்டு சாலை அமைக்கும் பணி ரூ.12 லட்சம் மதிப்பிலும், காட்டாமணிக்குப்பம் சாலை அமைக்கும் பணி ரூ.13 லட்சம் செலவிலும், அம்பேத்கர் நகர் இணைப்பு சாலை ரூ.10 லட்சம் செலவிலும் மேற்கொள்ளப்படுகிறது. இந்த பணிகளை பிரகாஷ்குமார் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் புதுச்சேரி நகராட்சி ஆணையர் சிவக்குமார், செயற்பொறியாளர் சிவபாலன், உதவி பொறியாளர் பழனிராஜா, இளநிலை பொறியாளர் சிவசுப்ரமணியம், சோலைநகர், அம்பேத்கர் நகர் நல்வாழ்வு நிர்வாகிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

1 More update

Next Story