அரசுப்பள்ளிகளில் கழிப்பறை கட்டும் பணி


அரசுப்பள்ளிகளில் கழிப்பறை கட்டும் பணி
x

அரசுப்பள்ளிகளில் கழிப்பறை கட்டும் பணியை எதிர்கட்சித் தலைவர் சிவா எம்.எல்.ஏ தொடங்கி வைத்தார்.

புதுச்சேரி

புதுவை மாநில கிராமாலயா நிறுவனத்தின் மூலம் வில்லியனூர் அரசு ஆண்கள் தொடக்கப்பள்ளி, பெரியபேட் அரசு தொடக்கப்பள்ளி மாணவர்கள் பயன்பெறும் வகையில் தலா ரூ.3.50 லட்சம் வீதம் ரூ.7 லட்சம் செலவில் கழிப்பறைகள் கட்டப்பட உள்ளன. இந்த பணிகளை சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் சிவா எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் தலைமை ஆசிரியர்கள் ரேணுகா, செல்வம், பள்ளி துணை ஆய்வாளர்கள் ராபர்ட் கென்னடி, சொக்கலிங்கம் மற்றும் தி.மு.க. நிர்வாகிகளான தொகுதி செயலாளர் ராமசாமி, விவசாய தொழிலாளர் அணி அமைப்பாளர் செல்வநாதன், ஆதிதிராவிடர் நலக்குழு துணை அமைப்பாளர் கலியமூர்த்தி, இளைஞர் அணி அமைப்பாளர் மணிகண்டன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.


Next Story