அளவுக்கு அதிகமாக சாராயம் குடித்ததால் நாக்கு வறண்டு கட்டிட தொழிலாளி சாவு


அளவுக்கு அதிகமாக சாராயம் குடித்ததால் நாக்கு வறண்டு கட்டிட தொழிலாளி சாவு
x

அளவுக்கு அதிகமாக சாராயம் குடித்ததால் நாக்கு வறண்டு கட்டிட தொழிலாளி சாவு போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறனர்.

பாகூர்

கடலூர் அடுத்த செம்மண்டலம் பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன் (வயது 47). கட்டிட தொழிலாளி. இவருக்கு புஷ்பா என்கிற மனைவியும் 2 குழந்தைகள் உள்ளனர். சில வருடங்களாக மனைவியை பிரிந்து வாழ்ந்து வருகிறார். இந்தநிலையில் கண்ணன் குடிப்பழக்கத்துக்கு ஆளானார். வேலைக்கு சென்ற அவர், பாகூர் அடுத்த சோரியாங்குப்பம் பகுதியில் உள்ள சாராயக்கடையில் சாராயம் குடித்து விட்டு வந்த அவர் நவாதோப்பில் உள்ள அய்யனார் கோவில் எதிரில் நாக்கு வறண்டு கீழே விழுந்து இறந்து விட்டார். அளவுக்கு அதிகமாக சாராயம் குடித்ததால் இந்த விபரீதம் நடந்தது.

இதுகுறித்து பாகூர் போலீஸ் உதவி சப்-இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story