அதிகாரிகளுடன் ஆலோசனை


அதிகாரிகளுடன் ஆலோசனை
x

கிருமாம்பாக்கம் சட்டமன்ற அலுவலகத்தில் ஏம்பலம் தொகுதி வளர்ச்சி பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது.

பாகூர்

கிருமாம்பாக்கம் சட்டமன்ற அலுவலகத்தில் ஏம்பலம் தொகுதி வளர்ச்சி பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு லட்சுமிகாந்தன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். பாகூர் தாசில்தார் பிரதீவ்ராஜ், துணை தாசில்தார் விமலன், வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் அனைத்து வருவாய் கிராமங்களிலும் சொத்து அடையாள அட்டை வழங்குவதற்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டு வழங்குவது குறித்தும், அரசு புறம்போக்கு, நத்தம் புறம்போக்கு கண்டறிவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. தொடர்ந்து லட்சுமிகாந்தன் எம்.எல்.ஏ. கூறுகையில் 'முதல் கட்டமாக அரசு புறம்போக்கு மற்றும் நத்தம் புறம்போக்கு இடங்களை கண்டறிந்து 1,000 பேருக்கு இலவச மனைப்பட்டா வழங்க ஏற்பாடு செய்து வருவதாக தெரிவித்தார்.


Next Story