மீன்பிடி துறைமுகத்தை விரிவாக்கம் செய்ய வலியுறுத்தி தொடர் வேலை நிறுத்த போராட்டம்

மீன்பிடி துறைமுகத்தை விரிவாக்கம் செய்ய வலியுறுத்தி தொடர் வேலை நிறுத்த போராட்டம்
x
தினத்தந்தி 20 Sep 2023 4:45 PM GMT (Updated: 20 Sep 2023 6:53 PM GMT)

மீன்பிடி துறைமுகத்தை விரிவாக்கம் செய்ய வலியுறுத்தி நாளை முதல் தொடர் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட 11 மீனவர் கிராம பஞ்சாயத்தார்கள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

காரைக்கால்

மீன்பிடி துறைமுகத்தை விரிவாக்கம் செய்ய வலியுறுத்தி நாளை முதல் தொடர் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட 11 மீனவர் கிராம பஞ்சாயத்தார்கள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

ஆலோசனை கூட்டம்

காரைக்கால் மாவட்டத்தில் உள்ள காரைக்கால் மேடு, கிளிஞ்சல்மேடு, கோட்டுச்சேரி மேடு, மண்டபத்தூர், பட்டினச்சேரி உள்ளிட்ட 11 மீனவ கிராமத்தை சேர்ந்த பஞ்சாயத்தார்கள் ஆலோசனைக் கூட்டம் காரைக்கால் மீன்பிடி துறைமுகத்தில் நேற்று நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் மீனவ கிராம பஞ்சாயத்து நிர்வாகிகள், மீனவர்கள் கலந்துகொண்டு மீன்பிடி துறைமுகத்தை விரிவாக்கம் செய்வது தொடர்பாக பேசினார்கள்.

வேலைநிறுத்த போராட்டம்

காரைக்கால் மீன்பிடி துறைமுகத்தை விரிவாக்கம் செய்யவேண்டும், துறை முகத்தை ஒட்டிய கடற்கரை முகத்துவாரத்தை தூர்வார வேண்டும், மீனவ கிராம சாலைகளை சரிசெய்ய வேண்டும், கிராமங்களில் அடிப்படை வசதிகளை செய்துதர வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற வெள்ளிக்கிழமை முதல் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவது என்று கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

இதுபற்றி முதல்-அமைச்சர், துறை அமைச்சருக்கு மனு அனுப்பி வைக்கப்படும் என்றும், மீன்பிடி படகுகளை துறைமுகத்தில் இருந்து கொண்டு சென்று, கடற்கரை சாலையில் உள்ள மீன்வளத்துறை அலுவலகம் முன்பு உள்ள அரசலாற்றில் நிறுத்தி வைக்கப்படும் என்றும் மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

Next Story