ஒப்பந்த டாக்டர்களை பணிநிரந்தரம் செய்ய முடியாது


ஒப்பந்த டாக்டர்களை பணிநிரந்தரம் செய்ய முடியாது
x

புதுவை சுகாதாரத்துறையில் பணியாற்றும் ஒப்பந்த டாக்டர்களை பணிநிரந்தரம் செய்ய முடியாது என்று மத்திய பணியாளர் தேர்வாணையம் கூறியுள்ளது.

புதுச்சேரி

புதுவை சுகாதாரத்துறையில் பணியாற்றும் ஒப்பந்த டாக்டர்களை பணிநிரந்தரம் செய்ய முடியாது என்று மத்திய பணியாளர் தேர்வாணையம் கூறியுள்ளது.

ஒப்பந்த டாக்டர்கள்

புதுவை அரசின் சுகாதாரத்துறையில் ஒப்பந்த அடிப்படையில் டாக்டர்கள் நியமிக்கப்பட்டு வருகின்றனர். இதன்படி சித்தா, ஆயுர்வேதா, ஓமியோபதி பிரிவுகளில் கடந்த 2001-ல் 2 பேர், 2005-ல் 12 பேர், 2010-ல் 6 பேர் என 20 பேர் நியமிக்கப்பட்டனர்.

அவர்கள் தங்களை பணிநிரந்தரம் செய்யக்கோரி அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர். இதுதொடர்பாக புதுவை அரசு சார்பில் மத்திய பணியாளர் தேர்வாணையத்துக்கு கோப்புகள் அனுப்பப்பட்டன.

நிராகரிப்பு

ஆனால் பணிநிரந்தரம் செய்யும் கோரிக்கையை மத்திய பணியாளர் தேர்வாணையம் நிராகரித்து விட்டது. இதுதொடர்பாக ஏற்கனவே சுப்ரீம் கோர்ட்டு வழங்கிய உத்தரவினையும் சுட்டிக்காட்டி புதுவை அரசுக்கு கடிதம் எழுதி உள்ளது.

இதனை புதுவை அரசின் நிர்வாக சீர்திருத்தத்துறை சார்பு செயலாளர் ஜெய்சங்கர் சுட்டிக்காட்டி அரசுத்துறைகளுக்கு குறிப்பாணை அனுப்பியுள்ளார். இந்த உத்தரவுகளை அனைவரும் கடைபிடிக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


Next Story