54 பேருக்கு தொடர் சிகிச்சை


54 பேருக்கு தொடர் சிகிச்சை
x

புதுச்சேரி

புதுவையில் இன்று காலை 10 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் 562 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் 10 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. அவர்கள் அனைவரும் புதுச்சேரியை சேர்ந்தவர்கள் ஆவர். நேற்று 24 பேர் குணமடைந்தனர்.

தற்போது ஆஸ்பத்திரிகளில் 2 பேர், வீடுகளில் 52 பேர் என மொத்தம் 54 பேர் தனிமைப்படுத்தப்பட்டு தொடர் சிகிச்சையில் உள்ளனர். புதுவையில் தொற்று பரவல் 1.78 சதவீதமாகவும், குணமடைவது 98.85 சதவீதமாகவும் உள்ளது.


Next Story