மேலும் 4 பேருக்கு கொரோனா


மேலும் 4 பேருக்கு கொரோனா
x

புதுவையில் மேலும் 4 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.

புதுச்சேரி

புதுவையில் இன்று காலை 10 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் 451 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அவர்களில் புதுச்சேரி மற்றும் காரைக்காலில் தலா 2 பேர் என 4 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. மாகி, ஏனாமில் புதியதாக யாருக்கும் தொற்று பாதிப்பு ஏற்படவில்லை. இன்று 10 பேர் குணமடைந்தனர். தற்போது ஆஸ்பத்திரியில் ஒருவர், வீடுகளில் 45 பேர் என 46 பேர் தனிமைப்படுத்தப்பட்டு தொடர் சிகிச்சையில் உள்ளனர்.

நேற்று முதல் தவணை தடுப்பூசியை 9 பேரும், 2-வது தவணை தடுப்பூசியை 57 பேரும், பூஸ்டர் தடுப்பூசியை 176 பேரும் செலுத்திக்கொண்டனர். இதுவரை 22 லட்சத்து 57 ஆயிரத்து 881 டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

அதேநேரத்தில் வைரஸ் காய்ச்சல் பாதிப்பும் குறைந்து வருகிறது. இன்று 291 சிறுவர்கள் அரசு ஆஸ்பத்திரியில் காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்றுள்ளனர். அதில் 14 பேர் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டனர். தற்போது 71 பேர் உள்நோயாளிகளாக தொடர் சிகிச்சையில் உள்ளனர்.


Next Story