வயலில் டிராக்டரை விட்டு நெற்பயிர் சேதம்


வயலில் டிராக்டரை விட்டு நெற்பயிர் சேதம்
x

பாகூரில் நிலத்தை சொந்தம் கொண்டாடுவதில் எழுந்த தகராறில் வயலில் டீராக்டரை விட்டு நெற்பயிரை சேதப்படுத்தியவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

பாகூர்

கடலூர் ராஜா முதலியார் சாவடியை சேர்ந்தவர் ரமேஷ் பிரபாகரன் (வயது 57). இவருக்கு சொந்தமான விவசாய நிலம் பாகூர் பகுதியில் உள்ளது. இதில் தற்போது நெல் சாகுபடி செய்துள்ளார்.

இந்த நிலையில் வில்லியனூர் பகுதியைச் சேர்ந்த முருகையன் என்பவர், இந்த நிலத்தை சொந்தம் கொண்டாடுவதால் பிரச்சினை இருந்து வந்தது.

சம்பவத்தன்று வயலில் பயிரிடப்பட்டிருந்த நெற்பயிரில் டிராக்டரை ஓட்டி முருகையன் சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதை பார்த்து விட்டு விவசாய நிலத்தை மேற்பார்வை செய்துவரும் நரசிங்கம் தடுக்க முயன்றார். அவருக்கு முருகையன் கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து பாகூர் போலீசில் புகார் அளித்ததன்பேரில் நெற்பயிரை சேதப்படுத்திய முருகையன் மற்றும் டிராக்டர் டிரைவர் சண்முகம் ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story